அல்லாஹ்வுடைய பாதையில் ஜோடியாக செலவு செய்தவர் சொர்க்கத்தில் பல வாயில்களிலிருந்தும் அழைக்கப்படுவார். அல்லாஹ்வின் அடிமையே! இது மிகச் சிறப்புமிக்கது! தொழுகையாளியாக இருந்தவர் ஸலாஹ் (தொழுகை) எனும் வாயிலில் அழைக்கப்படுவார். அறப்போர் புரிபவராக இருந்தவர் ஜிஹாத் (அறப்போர்) எனும் வாயிலில் அழைக்கப்படுவார். நோன்பாளியாக இருந்தவர் ரய்யான் எனும் வாயிலில் அழைக்கப்படுவார். தர்மம் வழங்குபவராக இருந்தவர் ஸதகா (தர்மம்) எனும் வாயிலில் அழைக்கப்படுவார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வுடைய தூதரே! எனது தாயும் தந்தையும் உங்களுக்கு அற்பணமாகட்டும்! ----- யாரேனும் ஒருவர் இந்த அனைத்து வாயில்களிலிருந்தும் அழைப்படுவாரா? என்று கேட்டார்கள். அதற்கு ஆம்! நீரும் அத்தகையோரில் ஒருவராக இருக்கலாம் என நான் கருதுகிறேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் : அபூஹுரைரா -ரலி நூற்கள் : புகாரீ 1764 முஸ்லிம்) |
No comments:
Post a Comment