Wednesday, 29 August 2012

[Islam is the right path] உலக செல்வங்கள் அனைத்தையும் விட மேலான செல்வம்!

உலக செல்வங்கள் அனைத்தையும் விட மேலான செல்வம்!...
Sayadu Rahman 29 August 07:39
உலக செல்வங்கள் அனைத்தையும் விட மேலான செல்வம்!

"அல்லாஹ்வின் அருட்கொடையினாலும், அவனுடைய பெருங் கிருபையினாலுமே (குர்ஆனாகிய இது வந்துள்ளது, எனவே) – இதில் அவர்கள் மகிழ்ச்சியடையட்டும், அவர்கள் திரட்டி வைத்திருக்கும் (செல்வங்களை) விட இது மிக்க மேலானது" என்று (நபியே!) நீர் கூறும். (அல்குர்ஆன்: 10:58)

View Post on Facebook · Edit email settings · Reply to this email to add a comment.

[Islam is the right path] இந்த பயம் உள்ளவர்களுக்கே இறை வேத எச்சரிக்கை...

இந்த பயம் உள்ளவர்களுக்கே இறை வேத எச்சரிக்கை...
Sayadu Rahman 29 August 07:38
இந்த பயம் உள்ளவர்களுக்கே இறை வேத எச்சரிக்கை பயனளிக்கும்!

"நபியே! எவர்கள் மறுமையில் தங்கள் இரட்சகனிடம் ஒன்று சேர்க்கப்பட்டு விசாரணை செய்யப்படுவோம் என்று பயப்படுகிறார்களோ அவர்கள் பாவத்திலிருந்து விலகி பரிசுத்தவான்களாகுவதற்காக நீர் எச்சரிக்கை செய்யும். அவர்களுக்கு (அந்நாளில்) உதவியாளனும், பரிந்து பேசுபவனும் அந்த அல்லாஹ்வையன்றி வேறு ஒருவருமில்லை" (அல்குர்ஆன்: 6:51)

View Post on Facebook · Edit email settings · Reply to this email to add a comment.

[Islam is the right path] நல்லடியார்களின் அழகிய பிரார்த்தனை!

நல்லடியார்களின் அழகிய பிரார்த்தனை! யூஸுஃப் நபி...
Sayadu Rahman 29 August 07:38
நல்லடியார்களின் அழகிய பிரார்த்தனை!

யூஸுஃப் நபி (அலை) 'இறைவா! நிச்சயமாக நீ எனக்கு ஒரு ஆட்சியை அருள் புரிந்தாய். கனவுகளின் விளக்கங்களையும் எனக்கு நீ கற்று தந்தாய். வானங்களையும் பூமியையும் படைத்தோனே! இம்மை, மறுமையில் என்னை இரட்சிப்பவன் நீயே! முற்றிலும் உனக்கு வழிப்பட்டவனாக (முஸ்லிமாக) என்னை நீ கைப்பற்றிக் கொள்வாயாக! நல்லடியார் கூட்டத்தில் என்னை சேர்த்து விடுவாயாக! என்று பிரார்த்தித்தார்கள்." (அல்குர்ஆன்: 12:101)

View Post on Facebook · Edit email settings · Reply to this email to add a comment.

[Islam is the right path] மனிதனுக்கு இறைவன் அருளும் அருட்கொடைகளின் உவமை!

மனிதனுக்கு இறைவன் அருளும் அருட்கொடைகளின் உவமை!...
Sayadu Rahman 29 August 07:37
மனிதனுக்கு இறைவன் அருளும் அருட்கொடைகளின் உவமை!

அ(ல்லாஹ்)வன் தான் வானத்திலிருந்து மழையை இறக்கினான். அப்பால் ஓடைகள் அவற்றின் அளவுக்குத் தக்கபடி (நீரைக் கொண்டு) ஓடுகின்றன. அவ்வெள்ளம் நுரையை மேலே சுமந்து செல்கிறது. (இவ்வாறே) ஆபரணமோ அல்லது (வேறு) சாமான் செய்யவோ (உலோகங்களை) நெருப்பில் வைத்து உருக்கும் போதும் அதைப் போல் நுரை உண்டாகின்றது. இவ்வாறு சத்தியத்திற்கும் அசத்தியத்திற்கும் அல்லாஹ் (உவமை) கூறுகிறான். அழுக்கு நுரை (பலனற்றதாக இருப்பதால்) அழிந்து போய் விடுகிறது. ஆனால் மனிதர்களுக்குப் பலன் அளிக்கக் கூடியதோ, பூமியில் தங்கி விடுகிறது. இவ்வாறே அல்லாஹ் உவமைகளைக் கூறுகிறான். (அல்குர்ஆன்: 13:17)

View Post on Facebook · Edit email settings · Reply to this email to add a comment.