Wednesday 10 October, 2012

[Islam is the right path] 10.10.2012

10.10.2012 சகோதரர் பி.ஜே. அவர்களின் கடிதம்...
Sayadu Rahman 10 October 20:16
10.10.2012

சகோதரர் பி.ஜே. அவர்களின் கடிதம்

மாநில நிர்வாகிகள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும். எனது உடல் நிலை குறித்து உங்களுக்கு இருக்கும் அக்கரையை நான் அறிவேன். ஆனாலும் என்ன சிகிச்சை செய்ய வேண்டி வந்தாலும் என் சக்திக்கு உட்பட்டு என்ன செய்ய இயலுமோ அதை இன்ஷா அல்லாஹ் நான் செய்து கொள்வேன். ஜமாஅத் மூலமோ தனிப்பட்ட நபர்கள் மூலமோ எனது சிகிச்சைக்காக செலவு செய்வதை நான் ஒரு போதும் ஏற்றுக் கொள்ள மாட்டேன்.

எனது நோய் தனிப்பட்ட மனிதன் என்ற முறையில் எனக்கு ஏற்பட்டுள்ளது. ஜமாஅத் பணிகளால் ஏற்படும் இழப்புகளைத் தான் ஜமாஅத் செய்யும் கடமை உண்டு.

ஒருவேளை என்னால் செலவு செய்ய இயலாத அளவுக்கு பெரும் செலவு ஏற்படும் நிலை வந்தால் நான் அழகிய பொறுமையை மேற்கொள்வேனே தவிர யாருடைய உதவியையும் நான் பெற்று சிகிச்சை மேற்கொள்ள நான் தயாராக இல்லை. இதற்காக யாரிடமும் கடனாகக் கூட வாங்கி செலவிடவும் நான் தயாராக இல்லை. என் சக்திக்கு உட்பட்ட வகையில் நான் முடிவு செய்யும் வகையில் என்னை விட்டுவிடுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்.

என் மருத்துவ செலவு தொடர்பாக எந்த ஆலோசனையும் செய்ய வேண்டாம் என்று கண்டிப்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் சில நிர்வாகிகள் இதை தமக்குள் வைத்துக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்திருப்பதாகக் கேள்விப்படுகிறேன். இது மறைக்க வேண்டிய விஷயம் அல்ல. மறைப்பதால் எந்த நன்மையும் இல்லை. நோய் வந்தால் ஃபித்னா செய்வார்கள் என்று நீங்கள் நினைப்பது முற்றிலும் தவறாகும். எந்த ஃபித்னா வந்தாலும் அதற்கு மார்க்க அடிபடையில் பதில் இருக்கும் போது பித்னாக்களுக்குப் பயந்து மறைப்பது ஏற்புடையதாக இல்லை. மறைக்கவும் முடியாது.

நான் மருத்துவமனையில் சேர்க்கப்படும் போது அடுத்த நிமிடம் உளவுத்துறைக்கு தெரிந்து எதிரிகளின் இயக்கங்களுக்கும் உடனே தெரிந்து விடும். அவர்கள் வழியாக நம் நிர்வாகிகளுக்குத் தெரியவரும் போது அது ஜமாஅத்தைப் பாதிக்கும். மனிதனுக்கு நோய் வருவது இயல்பானது தான். அல்லாஹ் இதுவரை எந்தப் பெரிய நோயும் இல்லாமல் எனக்கு பேருதவி புரிந்துள்ளான். இதுதான் ஆச்சரியமானது. இப்போது நோய் வந்துள்ளது ஆச்சரியமானது அல்ல. ஏதோ கொலைக் குற்றத்தை மறைப்பது போல் நோயை நீங்கள் மறைப்பதாக நான் கருதுகிறேன்.

புற்றுநோய் என்பது ஆபத்தான நோய் என்றாலும் மருத்துவ சிகிச்சை பெரும்பாலும் பயனளிப்பதில்லை என்றாலும் அல்லாஹ்வின் அருளால் குணமாக வாய்ப்பு உள்ளது. எனவே இதை நிர்வாகிகளுக்கும் முக்கியஸ்தர்களுக்கும் சொல்வதால் பலருடைய துஆக்கள் எனக்குக் கிடைக்கும். அதை நீங்கள் தடுக்கத் தேவை இல்லை.

அன்புடன்
பி.ஜைனுல் ஆபிதீன்

View Post on Facebook · Edit email settings · Reply to this email to add a comment.

[Islam is the right path] சகோதரத்துவம் ஈமானின் அடிப்படை

சகோதரத்துவம் ஈமானின் அடிப்படை
Sayadu Rahman 10 October 19:51
சகோதரத்துவம் ஈமானின் அடிப்படை

View Post on Facebook · Edit email settings · Reply to this email to add a comment.

[Islam is the right path] ஒப்பந்தம் செய்து கொண்ட பின்பு துரோகம் செய்தவனின்...

ஒப்பந்தம் செய்து கொண்ட பின்பு துரோகம்...
Sayadu Rahman 10 October 09:40
ஒப்பந்தம் செய்து கொண்ட பின்பு துரோகம் செய்தவனின் பாவம்.

அல்லாஹ் கூறுகிறான்:

(நபியே!) எவர் உங்களிடம் ஒப்பந்தம் செய்து கொண்டு பிறகு ஒவ்வொரு முறையும் தங்கள் ஒப்பந்தத்தைக் கொஞ்சமும் இறையச்சமின்றி முறிக்கின் றார்களோ அவர்கள் தான் (மிகக் கெட்டவர்கள்). (8:56)

View Post on Facebook · Edit email settings · Reply to this email to add a comment.

[Islam is the right path] அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:...
Sayadu Rahman 10 October 09:40
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான்கு குணங்கள் எவனிடம் குடி கொண்டுள்ளனவோ அவன் வடி கட்டிய நயவஞ்சகன் ஆவான். பேசும் போது பொய் சொல்வதும், வாக்குறுதி யளித்தால் (அதற்கு) மாறு செய்வதும், ஒப்பந்தம் செய்து கொண்டால் (நம் பிக்கை) மோசடி செய்வதும், வழக் காடினால் அவமதிப்பதும் தான் அவை. எவனிடம் இவற்றில் ஒரு குணம் குடி கொண்டுள்ளதோ அவன் அதை விட்டுவிடும் வரை அவனுள் நயவஞ்சகத் தின் ஒரு குணம் குடியிருக்கும். (முஸ்லிம் - 3178)

இதை அப்துல்லாஹ் பின் அம்ரு (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்

View Post on Facebook · Edit email settings · Reply to this email to add a comment.