Wednesday, 22 August 2012

[Muslim Group-1] இறைவனிடம் அபயம் பெறும் களங்கமில்லா ஈமான்!

இறைவனிடம் அபயம் பெறும் களங்கமில்லா ஈமான்! எவர்...
Sayadu Rahman 22 August 11:38
இறைவனிடம் அபயம் பெறும் களங்கமில்லா ஈமான்!

எவர் ஈமான் (நம்பிக்கை) கொண்டு அதன் பின்னர் தம்முடைய ஈமானை (இணை வைத்தல் என்னும்) அநீதியைக் கொண்டு களங்கப்படுத்த வில்லையோ, அவர்களுக்கே அபயமுண்டு. இன்னும் அவர்களே நேர்வழியை பெற்றுக் கொண்டவர்கள். (அல்குர்ஆன்: 6:82)

View Post on Facebook · Edit email settings · Reply to this email to add a comment.

[Muslim Group-1] விசுவாசம் என்ற நம்பிக்கையை அல்லாஹ்வுக்காக...

விசுவாசம் என்ற நம்பிக்கையை அல்லாஹ்வுக்காக...
Sayadu Rahman 22 August 11:38
விசுவாசம் என்ற நம்பிக்கையை அல்லாஹ்வுக்காக தூய்மைப் படுத்துதல்!

நபி மூஸா (அலை) (தம் சமூகத்தவரை நோக்கி) என்னுடைய சமூகத்தவரே! நீங்கள் மெய்யாகவே அல்லாஹ்வை விசுவாசித்து உண்மையாகவே நீங்கள் அவனுக்கு முற்றிலும் வழிப்படுகிறவர்களாக (முஸ்லிமாக) இருந்தால் அவனை முற்றிலும் நம்பி விடுங்கள். அவனிடமே உங்கள் காரியங்களை ஒப்படைத்து விடுங்கள் என்று கூறினார்கள்." (அல்குர்ஆன்: 10:84)

View Post on Facebook · Edit email settings · Reply to this email to add a comment.

[Muslim Group-1] மனிதனுக்கு நன்மைகளை அருளும் நற்கருமங்கள்!

மனிதனுக்கு நன்மைகளை அருளும் நற்கருமங்கள்!...
Sayadu Rahman 22 August 11:38
மனிதனுக்கு நன்மைகளை அருளும் நற்கருமங்கள்!

செல்வமும், பிள்ளைகளும் இவ்வுலக வாழ்க்கையின் அலங்காரங்களேயாகும். என்றும் நிலைத்து நிற்க கூடிய நற்கருமங்களே உம்முடைய இறைவனிடத்தில் நன்மைப் பலனுடையவையாகவும், (அவனிடத்தில்) நம்பிக்கையுடன் ஆதரவு வைக்கத்தக்கவையாகவும் இருக்கின்றன. (அல்குர்ஆன்: 18:46)

View Post on Facebook · Edit email settings · Reply to this email to add a comment.

[Muslim Group-1] அல்லாஹ்வை நம்பிக்கைக் கொண்டால் திறக்கப்படும்...

அல்லாஹ்வை நம்பிக்கைக் கொண்டால் திறக்கப்படும்...
Sayadu Rahman 22 August 11:37
அல்லாஹ்வை நம்பிக்கைக் கொண்டால் திறக்கப்படும் அருட்பாக்கியங்கள்!

நிச்சயமாக அவ்வூர்வாசிகள் ஈமான் (நம்பிக்கை) கொண்டு அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்திருந்தால், நாம் அவர்களுக்கு வானத்திலிருந்தும் பூமியிலிருந்தும் – பரகத்துகளை – பாக்கியங்களைத் திறந்து விட்டிருப்போம். ஆனால் அவர்கள் (நபிமார்களை நம்பாது) பொய்ப்பித்தனர், ஆகவே அவர்கள் செய்து கொண்டிருந்த (பாவத்)தின் காரணமாக நாம் அவர்களைப் பிடித்தோம். (அல்குர்ஆன்: 7:96)

View Post on Facebook · Edit email settings · Reply to this email to add a comment.

[Muslim Group-1] இறைச்சோதனையின் படித்தரங்கள்!

இறைச்சோதனையின் படித்தரங்கள்! (அல்லாஹ்வாகிய)...
Sayadu Rahman 22 August 11:33
இறைச்சோதனையின் படித்தரங்கள்!

(அல்லாஹ்வாகிய) அவன் தான் உங்களைப் பூமியில் பின்தோன்றல்களாக ஆக்கினான். அவன் உங்களுக்குக் கொடுத்துள்ளவற்றில் உங்களைச் சோதிப்பதற்காக, உங்களில் சிலரை சிலரை விடப் பதவிகளில் உயர்த்தினான். – நிச்சயமாக உம் இறைவன் தண்டிப்பதில் விரைவானவன். மேலும் அவன் நிச்சயமாக மன்னிப்பவன். மிக்க கருணையுடையவன். (அல்குர்ஆன்: 6:165)

View Post on Facebook · Edit email settings · Reply to this email to add a comment.

[Muslim Group-1] இறை நாட்டமே அனைத்திலும் முன்னிலை!

இறை நாட்டமே அனைத்திலும் முன்னிலை! “நாம்...
Sayadu Rahman 22 August 11:32
இறை நாட்டமே அனைத்திலும் முன்னிலை!

"நாம் உங்களுக்கு நல்லுபதேசம் செய்யக் கருதினாலும், உங்களை வழிகேட்டிலேயே விட்டு வைக்க அல்லாஹ் நாடியிருந்தால், என்னுடைய நல்லுபதேசம் உங்களுக்கு (யாதொரு) பயனும் அளிக்காது. அவன்தான் (உங்களைப் படைத்துப் பரிபாலிக்கும்) உங்களுடைய இறைவன். அவனிடமே நீங்கள் மீண்டும் கொண்டு வரப்படுவீர்கள்" (என்றும் கூறினார்). (அல்குர்ஆன்: 11:34)

View Post on Facebook · Edit email settings · Reply to this email to add a comment.

[Muslim Group-1] மக்களுக்கு நன்மாராயம் கூறுபவர்களான இறைத்தூதர்கள்!

மக்களுக்கு நன்மாராயம் கூறுபவர்களான...
Sayadu Rahman 22 August 11:32
மக்களுக்கு நன்மாராயம் கூறுபவர்களான இறைத்தூதர்கள்!

தூதர்கள் வந்தபின் அல்லாஹ்வுக்கு எதிராக மக்களுக்கு (சாதகமாக) ஆதாரம் எதுவும் ஏற்படாமல் இருக்கும் பொருட்டு, தூதர்கள் (பலரையும்) நன்மாராயங் கூறுபவர்களாகவும் (அல்லாஹ் அனுப்பினான்). மேலும் அல்லாஹ் (யாவரையும்) மிகைத்தவனாகவும், பேரறிவாளனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன்: 4:165)

View Post on Facebook · Edit email settings · Reply to this email to add a comment.

[Muslim Group-1] நன்கறிந்தோனும், ஞானம் மிக்கோனுமாகிய அல்லாஹ்வின்...

நன்கறிந்தோனும், ஞானம் மிக்கோனுமாகிய...
Sayadu Rahman 22 August 11:31
நன்கறிந்தோனும், ஞானம் மிக்கோனுமாகிய அல்லாஹ்வின் உண்மைக் கூற்று!

மனிதர்களே! உங்கள் இறைவனிடமிருந்து சத்தியத்துடன் (அனுப்பப்பட்ட இத்) தூதர் உங்களிடம் வந்துள்ளார். அவர் மீது ஈமான் கொள்ளுங்கள். (இது) உங்களுக்கு நன்மையாகும். ஆனால் நீங்கள் நிராகரிப்பீர்களானால், (இறைவனுக்கு எதுவும் குறைந்து விடாது, ஏனெனில்) நிச்சயமாக வானங்களிலும், பூமியிலும் இருப்பவை அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியவை. அல்லாஹ்வே (யாவற்றையும்) நன்கறிந்தோனும், ஞானம் மிக்கோனும் ஆவான். (அல்குர்ஆன்: 4:170)

View Post on Facebook · Edit email settings · Reply to this email to add a comment.

[Muslim Group-1] இறைச்சாபத்தில் நிலைத்திருக்கும் முந்தைய வேதமுடையோர்!

இறைச்சாபத்தில் நிலைத்திருக்கும் முந்தைய...
Sayadu Rahman 22 August 11:31
இறைச்சாபத்தில் நிலைத்திருக்கும் முந்தைய வேதமுடையோர்!

யூதர்கள் (நபி) உஜைரை அல்லாஹ்வுடைய மகன் என்று கூறுகிறார்கள்; கிறிஸ்தவர்கள் மஸீஹை (இயேசு) அல்லாஹ்வுடைய மகன் என்று கூறுகிறார்கள். இது அவர்கள் வாய்களால் கூறும் கூற்றேயாகும். இவர்களுக்கு முன்னிருந்த நிராகரிப்போரின் கூற்றுக்கு இவர்கள் ஒத்துப் போகிறார்கள். அல்லாஹ் அவர்களை அழிப்பானாக! எங்கே திருப்பப்படுகிறார்கள்? (அல்குர்ஆன்: 9:30)

View Post on Facebook · Edit email settings · Reply to this email to add a comment.

[Muslim Group-1] துன்பமான இறைச்சோதனையில் அல்லாஹ்வுக்கு நன்றி...

துன்பமான இறைச்சோதனையில் அல்லாஹ்வுக்கு நன்றி...
Sayadu Rahman 22 August 11:31
துன்பமான இறைச்சோதனையில் அல்லாஹ்வுக்கு நன்றி மறக்காதிருத்தல்!

….ஆனால் (வரண்ட) ஒரு காற்றை நாம் அனுப்பி அத(ன் காரணத்தி)னால் (பயிர்கள் உலர்ந்து) மஞ்சள் நிறமாவதை அவர்கள் பார்த்தால், அதன் பின், (முன்னர் நன்மழை அனுப்பியதற்கு நன்றி மறந்து) நிராகரிப்போராக இருந்து விடுகின்றனர். (அல்குர்ஆன்: 30:51)

View Post on Facebook · Edit email settings · Reply to this email to add a comment.